Home கலை உலகம் ஆபாச காணொளியை வெளியிடுவது கற்பழிப்பை விட கொடுமையானது – ஹன்சிகா மோத்வானி

ஆபாச காணொளியை வெளியிடுவது கற்பழிப்பை விட கொடுமையானது – ஹன்சிகா மோத்வானி

1881
0
SHARE
Ad

?????????????????????????????சென்னை, மார்ச் 5 – ஆபாசப் படங்களை வெளியிடுவது கற்பழிப்பை விட மோசமானது என்று நடிகை ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஹன்சிகாவின் குளியல் காணொளி என்ற பெயரில் வெளியான சில நிமிட ஆபாசப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த காணொளி குறித்து அவர் கூறுகையில், “இதுபோல் ஆபாச காணொளிகள் வெளியாவது மிகவும் வருத்தப்பட வேண்டிய விசயம். சினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. 365 நாட்களும் கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களை மகிழச்சிபடுத்துகிறோம்”.

“ஆனால் எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனது வருகிறது என்று புரியவில்லை. இப்படிப்பட்ட ஆபாச காணொளியை வெளியிடுவது  கற்பழிப்பை விட கொடுமையானது. எங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் ஹன்சிகா.

#TamilSchoolmychoice

 

 

Comments