Home நாடு உக்ரைனில் தண்டனை பெற்ற எம்பி நாடாளுமன்றத்தில் பங்கேற்றாரே? – அரசாங்கத்திற்கு பிகேஆர் கேள்வி

உக்ரைனில் தண்டனை பெற்ற எம்பி நாடாளுமன்றத்தில் பங்கேற்றாரே? – அரசாங்கத்திற்கு பிகேஆர் கேள்வி

518
0
SHARE
Ad

Anwarகோலாலம்பூர், மார்ச் 5 – அரசியல் கைதியான எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு நாடாளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டது குறித்து பிகேஆர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு நாடாளுமன்றத்தில் கலந்து கொள்ள இயலாது என்று அரசாங்கம் விடுத்துள்ள அறிக்கை ஏற்றுக் கொள்ள இயலாது என்று பிகேஆர் இளைஞர்  பிரிவு துணைத்  தலைவர்  அபிப்  பகார்டின்  தெரிவித்துள்ளார்.

“அரசியல் கைதிகள் நாடாளுமன்றத்தில் பங்கேற்க எந்த நாடும் அனுமதிப்பதில்லை என்பது அரசாங்கத்தின் அறியாமையைக் குறிக்கிறது” என்று அபிப் பகார்டின் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

உக்ரைன் நாட்டு எதிர்கட்சித் தலைவர் யுலியா தைமோசெங்கோ, அதிகார துஷ்பிரயோகம் செய்தார் என கடந்த 2011-ம் ஆண்டு, அக்டோபர்  11-ம் தேதி அந்நாட்டு நீதிமன்றம் அவருக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை  விதித்தது.

அந்த நிலையிலும் அவர் நாடாளுமன்றக்  கூட்டத்தில்  கலந்துகொள்ள  அனுமதிக்கப்பட்டார்  என்பதை  அபிப் பகார்டின் சுட்டிக்காட்டினார்.