நெல்சன், மார்ச் 5 – உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெற்ற 27–வது லீக் ஆட்டத்தில் ‘ஏ’ பிரிவில் உள்ள வங்கதேசம் – ஸ்காட்லாந்து அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதையடுத்து பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. அந்த அணியில் சிறப்பாக விளையாடிய தொடக்க ஆட்டக்காரர் கோயட்சர் 156 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
பின்னர் வெற்றிக்கு 319 ரன்கள் தேவை என்ற இலக்குடன் வங்கதேச அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக தமீம் இக்பாலும், சவும்யா சர்க்காரும் களமிறங்கினர். 2வது ஓவரிலேயே 2 ரன்னுக்கு அவுட்டாகி வெளியேரினர்.
பின்னர் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 322 ரன்களை குவித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக ஸ்காட்லாந்தின் கோயட்சர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.