Home இந்தியா மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக ஒரு போதும் செயல்படாது – நரேந்திர மோடி

மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக ஒரு போதும் செயல்படாது – நரேந்திர மோடி

664
0
SHARE
Ad

modiமத்திய பிரதேசம், மார்ச் 6 – நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்கும் படி எதிர்க்கட்சிகளை கேட்டுக் கொண்டும் அவர்கள் அதற்கு பதில் அளிக்காதது வருத்தம் அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் தான் விவசாயிகளுக்கு எதிரானவன் அல்ல என்று கூறினார். மத்திய அரசு விவசாயிகளுக்கு எதிராக ஒரு போதும் செயல்படாது என்றும் கூறினார்.

மேலும், ஏழைகள், விவசாயிகள் மற்றும் மலைவாழ் மக்கள் தலித் சகோதர சகோதரிகள் என அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக பட்ஜெட்டில் நிறைய அம்சங்கள் இருப்பதாக தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

முந்தைய அரசு கொண்டு வந்த சட்டத்தில் மருத்துவமனை, பள்ளி, சாலை, வீடு போன்ற வசதிகளை செய்து தருவது குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என்று கூறிய பிரதமர் அந்த வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது என்றார்.

அடுத்த தலைமுறையினரின் வாழ்க்கையை ஒளி மயமானதாக மாற்ற மின்சாரத்தை சேமிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நரேந்திர மோடி மின் சக்தி இல்லாமல் ஒரு நாடு வளர்ச்சி அடைய முடியாது எனவும் கூறினார்.