Home நாடு தன்னை கடித்த இராஜநாகத்துடன் மருத்துவமனைக்கு வந்த தொழிலாளர்!

தன்னை கடித்த இராஜநாகத்துடன் மருத்துவமனைக்கு வந்த தொழிலாளர்!

561
0
SHARE
Ad

IMG-20150304-WA0088-600x360கோலாலம்பூர், மார்ச் 6 – இந்தோனேசியாவைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவர் தன்னைக் கடித்த 3 மீட்டர் நீளமுடைய இராஜநாகத்தை மருத்துவமனைக்கே கையோடு எடுத்துக் கொண்டு வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

துவாரான் பகுதியில் உள்ள கம்போங் செருசுப் என்ற இடத்தில் மாலை 5.30 மணியளவில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற அவரை அந்த இராஜநாகம் கடித்துள்ளது.

உடனடியாக, தன்னை கடித்த இராஜநாகத்தை கொன்ற அவர், அதையும் எடுத்துக் கொண்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் அருகில் இருந்த துவாரான் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

#TamilSchoolmychoice

மருத்துவமனை பணியாளர் ஒருவர் அந்த இராஜநாகத்தை கையில் வைத்திருப்பது போன்ற படம் நேற்று நட்பு ஊடகங்களில் பலராலும் பகிரப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

“மாலை 6.30 மணிக்கு அந்த நபர் அவசர சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். ஆபத்தான நிலையில் அவர் இருந்தாலும் இன்னும் சுயநினைவுடன் தான் உள்ளார்” என்று அந்த மருத்துவமனையைச் சேர்ந்த பணியாளர் கூறியுள்ளார்.