Home கலை உலகம் இந்தி மொழியில் படமாக்கப்படுகிறது அஜீத்தின் ‘மங்காத்தா’ !

இந்தி மொழியில் படமாக்கப்படுகிறது அஜீத்தின் ‘மங்காத்தா’ !

1159
0
SHARE
Ad

Mankatha-100-daysபுதுடெல்லி, மார்ச் 6 – அஜித் நடிப்பில் வெளியான “மங்காத்தா” படத்தை ‘ஸ்டூடியோ க்ரீன்’ நிறுவனம் இந்தி மொழியில் படமாக்கவிருக்கிறது. அஜித், அர்ஜூன், திரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி அமரன், உள்ளிட்ட பலர் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படம் மங்காத்தா.

இப்படத்தை யுவன் இசையமைக்க, க்ளவுட் நைன் மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. படம் தொழில் ரீதியில் வசூல் சாதனைப் படைத்தது. அதனால் இப்படத்தின் இந்தி உரிமையை ‘ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்’ கைப்பற்றியது.

mankatha-50-days02இப்படத்தின் மூலம் ‘ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்’ முதன் முறையாக இந்தியிலும் பட தயாரிப்பில் இறங்குகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற ஆரம்பித்திருக்கின்றன. மேலும் நடிக்கவிருக்கும் நடிகர், நடிகைகள் யார் என்பது விரைவில் தெரிய வரும்.