Home இந்தியா அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் நியமனம்!

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் நியமனம்!

583
0
SHARE
Ad

Arun-Singh_6புதுடெல்லி, மார்ச் 9 – அமெரிக்காவுக்கான இந்திய தூதராக அருண் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவுக்கான இந்திய தூதராக வகித்த எஸ்.ஜெய்சங்கர் கடந்த ஜனவரி மாதம் வெளியுறவுச் செயலராக நியமிக்கப்பட்டார்.

அதையடுத்து அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் பதவிக்கு தற்போது பிரான்ஸ் நாட்டுக்கான தூதராக உள்ள அருண் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்.  பிரதமர் மோடி அடுத்த மாதம் பிரான்சில் மேற்கொள்ள உள்ள பயணத்துக்குப் பிறகே அருண் சிங் அமெரிக்க தூதராக பதவியேற்பார் என்று கூறப்படுகிறது.

வாஷிங்டனில் 5 ஆண்டுகள் இந்தியத் துணைத் தூதராகப் பொறுப்பு வகித்துள்ள அருண் சிங், 1979-ஆம் ஆண்டு ஐ.எஃப்.எஸ். பிரிவைச் சேர்ந்தவர். இந்திய வெளியுறவுத் துறையில் பாகிஸ்தான், ஈரான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கான பிரிவுகளில் பணி புரிந்துள்ளார் அருண்சிங்.