Home கலை உலகம் ‘நிர்பயா’ ஆவணப்படம் குறித்து அமலா பால், டாப்சி கண்டனம்!

‘நிர்பயா’ ஆவணப்படம் குறித்து அமலா பால், டாப்சி கண்டனம்!

790
0
SHARE
Ad

Tapsee-1078சென்னை, மார்ச் 9 – கடந்த சில நாட்களாக ‘நிர்பயா’ குறித்த ‘இந்திய மகள்’ என்ற குறும் படம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. குற்றவாளிகள், வழக்கறிஞர்கள், மேலும் பலர் பேசும் ஆவணப்படமாக உருவாகியுள்ள இதில், குற்றவாளிக்கு ஆதரவான வழக்கறிஞர் பேசியது இன்னும் சற்று எதிர்ப்பலைகளை உருவாக்கியுள்ளது.

மக்களாட்சி நாட்டில் இதற்கு கூட தடையா , இது பல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது என ‘இந்திய மகள்’ என்ற குறும் படம் குறித்து பல பிரபலங்களும் தங்களது கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

இது குறித்து அமலா பால் கூறியதாவது; “பெண்களுக்கு இன்னும் சக்தியை கொடு கடவுளே, முக்கிமாக இது போன்ற வழக்கறிஞர்களிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள சக்தி வேண்டும், மேலும் குற்றவாளிக்கு இவன் ஒன்றும் சலைத்தவனில்லை என சீறிப்பாய்ந்துள்ளார்”.

#TamilSchoolmychoice

டாப்சியும் தனது கருத்தாக, “முற்றிலுமாக வெறுப்படைய செய்த ஒன்று,  அந்த குறும் படம் தடை செய்வதால் மட்டும் அவர்களுக்கு நல்ல புத்தி வரப்போவதில்லை” எனவும் கூறியுள்ளார்.