Home உலகம் ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

910
0
SHARE
Ad

1024px-Pride_of_Alohaகொழும்பு, மார்ச் 9 – ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது குறித்து இந்தியா-இலங்கை இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் நேற்று முன்தினம் இலங்கை வெளியுறவு அமைச்சர் மங்கள சமரவீராவை சந்தித்து பேசினார்.

அந்த பேச்சுவார்த்தையின் போது, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்தின்போது செய்து கொள்ள வேண்டிய உடன்பாடுகள் குறித்து இருவரும் விவாதித்தனர்.

#TamilSchoolmychoice

மேலும், இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்தும் இரு தலைவர்களும் முக்கிய ஆலோசனை நடத்தினர்.

ஏற்கனவே கொழும்பு-தூத்துக்குடி இடையே நேரடி பயணிகள் கப்பல் போக்குவரத்து, கடந்த 2011-ம் ஆண்டு நடத்தப்பட்டது. ஆனால் இந்த பயணிகள் கப்பல் சேவை வணிக ரீதியில் தோல்வி கண்டது. இதையடுத்து அந்த கப்பல் சேவை நிறுத்தப்பட்டது.

அதற்கு முன்பாக 1980-களில் ராமேஸ்வரம்-தலைமன்னார் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து நடைபெற்று வந்தது. ஆனால் அப்போது இலங்கை இராணுவத்திற்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையேயான உள்நாட்டுப்போர் தீவிரம் அடைந்தது இருந்ததால், அந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அது மீண்டும் தொடங்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. இதனிடையே சுஷ்மா – மங்கள சமரவீரா சந்திப்பு பற்றி இலங்கை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சாதிக் கூறுகையில்,

“இந்தியா -இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்தை தொடங்குவது தொடர்பாக இருவரும் விவாதித்தார்கள். இந்த கப்பல் போக்குவரத்தை விரைவாக தொடங்க இருநாடுகளும் ஆர்வமாக உள்ளன” என்று கூறியுள்ளார்.