Home Video கேம் ஓவர்: டாப்ஸியை மிரட்டும் ஒளிஉரு விளையாட்டு!

கேம் ஓவர்: டாப்ஸியை மிரட்டும் ஒளிஉரு விளையாட்டு!

770
0
SHARE
Ad

சென்னை: `மாயா‘, ‘இறவாக்காலம்படங்களை இயக்கிய அஸ்வின் சரவணன் அடுத்ததாக டாப்ஸியை வைத்து `கேம் ஓவர்என்ற படத்தை இயக்கி வருகிறார். வினோதினி வைதிநாதன், அனிஷ் குருவில்லா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் முன்னோட்டக் காணொளி 15-ஆம் தேதி வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் டாப்ஸி இந்த படத்திலும் வித்யாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இந்தக் காணொளியில் ஒளிஉரு விளையாட்டு (video game) தொடர்பான காட்சிகள் இடம் பெறுகிறது. ஒளிஉரு விளையாட்டு விளையாடி அதில் மூழ்குவதால் ஏற்படும் பிரச்னைகள் என்னென்ன என்பதைப் பற்றிய கதையாக இருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. வருகிற ஜூன் 14-ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெயின்மெண்ட் இணைந்து தயாரித்துள்ளது.

இந்த படத்தின் இந்தி உரிமையை பிரபல பாலிவுட் இயக்குனரும், `இமைக்கா நொடிகள்படத்தில் வில்லனாக நடித்து தமிழ் சினிமா இரசிகர்களை கவர்ந்தவருமான அனுராக் காஷ்யப் வாங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணொளியைக் காணலாம்: