Home நாடு பிடிபிடிஎன் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் தாருங்கள்!- அன்வார்

பிடிபிடிஎன் கடனை திருப்பிச் செலுத்த கால அவகாசம் தாருங்கள்!- அன்வார்

681
0
SHARE
Ad

பாங்கி: தேசிய உயர் கல்விக் கடனைச் (பிடிபிடிஎன்) செலுத்தாதவர்களுக்கு குறிப்பிட்ட ஒரு கால அவகாசத்தை தரலாம் என பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் கூறினார்.

முன்னதாக நேற்று வியாழக்கிழமை, கடனைச் செலுத்தாதவர்களுக்கு எதிராக வெளிநாடுகளுக்கு செல்லும் பயணக் கட்டுப்பாடுகளை மறுபடியும் அறிமுகப்படுத்தப்படலாம் என பிடிபிடிஎன் தலைவர் வான் சைபுல் வான் ஜான் கூறியிருந்தார்.

இதனால் வரையிலும் நிறைய பேர் இன்னும் தாங்கள் பெற்றக் கடனைச் செலுத்தாமல் இருப்பதாகவும், அதற்காக, மேலும் ஒரு சில வழிமுறைகளை கண்டறிந்து அக்கடன்களை பெற பிடிபிடிஎன் ஆலோசித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

#TamilSchoolmychoice

கடனைப் பெற்ற ஒரு சிலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை என்ற விசயத்தையும் நிதியம் கருத்தில் கொள்ள வேண்டும் என அன்வார் தெரிவித்தார்.

மக்களின் விருப்பத்திற்கு நான் என்றுமே ஆதரவளிப்பேன்.  எந்த கடுமையான செயல்களுக்கும் பொதுமக்கள் உடன்பட மாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்என அவர் கூறினார்.

அவர்கள் கடன் வாங்கினர், ஆனால், இன்னும் வேலை எதுவும் கிடைக்கவில்லை. நாம்ஏன்மேலும் சுமையை அவர்கள் மீது திணிக்க வேண்டும்?” என அன்வார் வினவினார்.