Home கலை உலகம் வில்லியாக நடிக்கிறார் டாப்ஸி!

வில்லியாக நடிக்கிறார் டாப்ஸி!

598
0
SHARE
Ad

Kollywood-news-8718சென்னை, மார்ச் 27 – கதாநாயகி வேடத்திலிருந்து வில்லி வேடத்துக்கு மாறினார் டாப்ஸி. ஆடுகளம், வந்தான் வென்றான் போன்ற படங்களில் நடித்துள்ள டாப்ஸிக்கு தமிழில் அதிக அளவில் படங்கள் அமையவில்லை. தெலுங்கில் பட வாய்ப்பு அதிகரித்ததால் டோலிவுட்டில் கவனம் செலுத்தி வந்தார்.

இதற்கிடையில் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கும் வை ராஜா வை படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. வழக்கமான லவ் டூயட் பாடும் நாயகியாக இல்லாமல் வில்லித்தனமான வேடமாக இது அமைந்திருக்கிறது.

மரத்தை சுற்றி காதல் டூயட் பாடிக்கொண்டிருந்த டாப்ஸிக்கு இந்த வேடம் புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. மாறுபட்ட வேடம் என்பதால் உடனே நடிக்க ஒப்புக்கொண்டார்.

#TamilSchoolmychoice

தற்போது படத்தின் பெரும்பகுதி முடிந்திருக்கிறது. கவுதம் கார்த்திக் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு பிரியா ஆனந்த் ஜோடி. வில்லியாக நடிப்பது பற்றி டாப்ஸி கூறும்போது, இப்படியொரு வேடத்தை எனக்கு தந்ததற்காக ஐஸ்வர்யாவுக்கு நன்றி கூறினார்.

கதாநாயகி வேடத்திலிருந்து மிக குறுகிய காலத்திலேயே வில்லியாக நடிக்க டாப்ஸி ஒப்புக்கொண்டிருப்பது அவரது தைரியத்தை வெளிப்படுத்தி இருப்பதாக பட குழுவினர் தெரிவிக்கின்றனர்.