கோலாலம்பூர், மார்ச் 11 – மலேசியாவின் பிரபல பூப்பந்து விளையாட்டு வீரர் டத்தோ லீ சோங் வெய் மீது சுமத்தப்பட்டிருக்கும் ஊக்கமருந்து குற்றச்சாட்டு வரும் ஏப்ரல் 11-ம் தேதி விசாரணைக்கு வருகின்றது.
கோப்பன்ஹேகன் நகரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற சோங் வெய் பின்னர் ஊக்க மருந்து பரிசோதனையின் போது சிக்கினார்.
தடை செய்யப்பட்ட ‘டெக்சாமிதாசோன்’ என்ற மருந்தை பயன்படுத்திய காரணத்தால், 32 வயதான அவருக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து மேல் முறையீடு செய்துள்ளார் சோங் வெய்.
அண்மையில், சோங் வெய் வெளியிட்ட அறிக்கையில், இந்த வழக்கின் தீர்ப்பு தனக்கு எதிராகி, போட்டிகளில் பங்கேற்க தனக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் தடை உறுதி செய்யப்படும் பட்சத்தில் விளையாட்டுக் களத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.