Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியா,இந்தோனேசியாவிற்கு 3 புதிய வழித்தடங்கள் – ஏர் ஏசியா அறிவிப்பு!   

இந்தியா,இந்தோனேசியாவிற்கு 3 புதிய வழித்தடங்கள் – ஏர் ஏசியா அறிவிப்பு!   

603
0
SHARE
Ad

air-asia-xகோலாலம்பூர், மார்ச் 12 – மலேசியாவில் இருந்து இந்தியா மற்றும் இந்தோனேசியாவை, மூன்று புதிய வழித்தடங்கள் வழியாக இணைக்க இருப்பதாக ஏர் ஏசியா நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்தியாவின் விசாகபட்டினம் மற்றும் இந்தோனேசியாவின் பொன்டியானக், மெடான் நகரங்களை இணைப்பது குறித்து ஏர் ஏசியா வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மே மாதம் 7-ம் தேதி முதல், கோலாலம்பூர்-விசாகப்பட்டினத்தை இணைக்கும் வழித்தடங்களை தொடங்க இருக்கின்றோம். இந்த வழித்தடங்களுக்கான விமான சேவை வாரத்தில் மூன்று நாட்களுக்கு இருக்கும்.”

#TamilSchoolmychoice

அதேபோல் கோலாலம்பூர்-பொன்டியானக்ஜோகூர் பாரு-மெடான் நகரங்களுக்கான சேவை இம்மாதம் 27-ம் தேதி முதல் தொடங்கும். இங்கு வாரத்தில் இரண்டு நாட்களுக்கு ஏர் ஏசியா விமான சேவை இருக்கும்” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

புதிய வழித்தடங்கள் குறித்து ஏர் ஏசியாவின் வணிகப் பிரிவின் தலைவர் ஸ்பென்சர் லீ கூறுகையில், “பொன்டியானக்-கோலாலம்பூரை இணைக்கும் விமான சேவை முதல் முறையாக தொடங்கப்பட இருக்கின்றது. அதேபோல்ஜோகூர் பாரு-மெடான் நகரங்களுக்கு இடையே மீண்டும் விமான சேவையை தொடங்க இருப்பது மகிழ்ச்சி அளிக்கின்றது.”

விசாகப்பட்டினம்-கோலாலம்பூர் நகரங்களுக்கு இடையே விமான சேவை தொடங்கப்படுவதற்கு முக்கிய காரணம் வாடிக்கையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை ஆகும். வர்த்தக வளர்ச்சியில் விசாகப்பட்டினம் நீடித்த வளர்ச்சி பெறுவதால், விமான சேவைகளும் அதிகரித்த வண்ணம் உள்ளன” என்று கூறியுள்ளார்.