பகோடா, மார்ச் 12 – கொலம்பியா தலைநகர் பகோடாவில் திடீரென்று ஏற்பட்ட நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 6.8 என்ற அளவில் பதிவாகியது. இதில் அதிர்ஷ்டவசமாக சேதங்கள் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
தென்அமெரிக்க நாடான கொலம்பியாவில் தலைநகர் பகோடாவில் நேற்று திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.8 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
நிலநடுக்கம் ஏற்பட்டபோது கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த பொதுமக்கள் வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். புகாரமங்கா நகரின் தென்புறத்தில் 17 மைல் தொலைவில் 98.5 மைல் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டு இருந்தது.
நிலநடுக்கம் காரணமாக உயிர்சேதமோ, பொருட்சேதமோ ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை. இந்த நிலநடுக்கம் அங்கு பல நகரங்களில் உணரப்பட்டது.