Home தொழில் நுட்பம் மனிதர்கள் இனி 500 ஆண்டுகள் வாழலாம் – கூகுளின் வியக்கதகு ஆராய்ச்சி!

மனிதர்கள் இனி 500 ஆண்டுகள் வாழலாம் – கூகுளின் வியக்கதகு ஆராய்ச்சி!

609
0
SHARE
Ad

human2கலிபோர்னியா, மார்ச் 12 – “வரும் காலத்தில் மனிதர்களின் சராசரி ஆயுட்காலம் 500 ஆண்டுகள்” – இந்த கூற்று தற்போது நகைப்பிற்குரியதாக இருக்கலாம். ஆனால் இதனை மெய்பிக்க கூகுள் நிறுவனம் நடத்தி வரும் ஆராய்ச்சி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

இது தொடர்பான ஆய்வுகளுக்கு தலைமை ஏற்று இருக்கும் பில்மார்ஸ், மனிதர்களின் ஆயுட்காலம் தொடர்பாக வெளியிடும் தகவல்கள் அறிவியல் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.

தகவல் தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகள் மட்டுமல்லாமல் அறிவியல் சார்ந்து பல்வேறு ஆராய்ச்சிகளை செய்து வரும் கூகுள், பல பில்லியன் டாலர்கள் முதலீட்டில் நடத்தி வரும் மனிதர்களின் ஆயுட்காலம் தொடர்பான ஆராய்ச்சி பல்வேறு புதிர்களுக்கு விடை அளிப்பதாக உள்ளது.

#TamilSchoolmychoice

குறிப்பாக முதுமையைத்  தடுக்கும் அறிவியல், மரபணு மற்றும் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவது தொடர்பான ஆராய்ச்சிகளில் அந்நிறுவனம் அதிக அக்கறை காட்டி வருகின்றது.

இந்த ஆய்வுகளை தலைமையேற்று நடத்திவரும் பில்மார்ஸ் இந்த ஆய்வுகள் பற்றி கூறுகையில், “மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிப்பதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்கி வருகிறோம்.

மரணத்தைத் தடுக்க முடியாது. ஆனால், கண்டிப்பாக நீண்ட காலத்திற்கு நீட்டிக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இதற்கான ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதுவரை மனிதர்களின் ஆயுள் அதிகபட்சமாக 120 ஆண்டுகள் என்று கூறப்பட்டு வரும் நிலையில், கூகுளின் 500 ஆண்டுகள் ஆராய்ச்சி அறிவியல் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேற்கூறிய ஆராய்ச்சி உண்மையானால், கூகுள் இடப்பற்றாக்குறையை போக்க பூமியின் அளவை நீட்டிக்கும் ஆராய்ச்சிகளையும் இனி செய்ய வேண்டியது தான்.