ஆனால் ஹன்சிகா அஜீத் படத்தில் நான் நடிக்கவில்லை என டுவிட்டரில் கூறியிருந்தார். சிவா படம் என்றாலே தமன்னாதான் கதாநாயகி என்ற ரீதியில் தமன்னா பெயரும் அடிபட்டது. ஆனால் அவரும் இல்லாமல் விஜய், சூர்யா, விக்ரம் தொடர்ந்து சமந்தா அஜீத்துடன் ஜோடியாகிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது.
தற்போது படத்தில் ஸ்ருதி ஹாசன் நாயகியாக நடிக்க இருக்கிறார். சூர்யா, விஷால், விஜய் என முன்னனி கதாநாயர்களுடன் ஜோடி சேர்ந்த உலக நாயகனின் மகள், அடுத்து அஜித்துக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். மேலும் படத்தில் நகைச்சுவைக்காக மீண்டும் சந்தானம் இணைந்துள்ளார்.
தற்போது தன் மகனுடன் நேரத்தை செலவிட்டு வரும் அஜீத் இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பிற்கு திரும்பிவிடுவார். மேலும் படத்தை ’ஆரம்பம்’, மற்றும் ‘என்னை அறிந்தால்’படங்களை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.