Home இந்தியா புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு!

புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு!

468
0
SHARE
Ad

puthiya thalaimuraiசென்னை, மார்ச் 12 – சென்னையில் புதிய தலைமுறை செய்தி தொலைக்காட்சி அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீசப்பட்டு உள்ளது.  இன்று டிபன் பாக்ஸில் அடைக்கப்பட்டு இருந்த இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் புதிய தலைமுறை அலுவலகம் மீது வீசப்பட்டது.

சம்பவம் அதிகாலை 3 மணியளவில் நடைபெற்றது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு பேர் அலுவலகம் மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் அடையவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. குண்டு வீச்சு தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தடயங்களை சேகரித்தனர்.

#TamilSchoolmychoice

2 டிபன் பாக்ஸ் குண்டுகளின் பாகங்களைக் கொண்டு வெடிகுண்டு நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். குண்டுவீச்சு தொடர்பாக யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. போலீசார் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

சி.சி.டி.வி. கேமராக்களில் பதிவாகியிருக்கும் காட்சிகளை வைத்து, குண்டுவீசிய நபர்களை காவல்துறையினர் தேடிவருகின்றனர். சம்பவத்தை அடுத்து அலுவலகம் முன்பு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் தாலி தொடர்பான விவாதம் நடைபெற்றது, இதனை ஏற்றுக் கொள்ள முடியாத அமைப்புகள் போராட்டம் நடத்தின. அலுவலகம் மீது கடந்த ஞாயிறு அன்று தாக்குதல் நடத்தப்பட்டது.

தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. தொலைக்காட்சியின் பொருட்களும் சேதப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.