Home நாடு மஇகா தேர்தல் குழுத் தலைவராக டி.பி.விஜேந்திரனை மத்திய செயற்குழு நியமித்தது

மஇகா தேர்தல் குழுத் தலைவராக டி.பி.விஜேந்திரனை மத்திய செயற்குழு நியமித்தது

702
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 12 – இன்று பிற்பகலில் கட்சியின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தலைமையில் மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற மஇகாவின் 2009 மத்திய செயலவைக் கூட்டத்தில் மஇகாவின் தேர்தல் குழுத் தலைவராக கட்சியின் முன்னாள் உதவித் தலைவரும், வழக்கறிஞருமான டி.பி.விஜேந்திரனை நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

DP-Vijandranஇன்றைக்கு கட்சியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளைத் தொடர்ந்து, ஒரு மூத்த மஇகா தலைவரும், சட்டத் துறையில் அனுபவம் மிக்கவருமான ஒருவரை தேர்தல் குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் என்ற அடிப்படையில் விஜேந்திரனைத் தாங்கள் நியமித்துள்ளதாக டாக்டர் சுப்ரா, இன்றைய கூட்டத்திற்குப் பின்னர் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார்.

“டி.பி.விஜேந்திரனுக்கு அடுத்து ஒரு நியமனக் கடிதத்தை அனுப்பவிருக்கின்றோம். அவ்வாறு அவர் எங்களின் பரிந்துரையை ஏற்று தலைவராக செயல்பட முன்வந்தால் அவரது தலைமையில் தேர்தல் குழுவை நியமித்து, ஏப்ரல் மாதத்தில் கிளைகளுக்கான தேர்தல்களையும், மே மாதத்தில் தேசியத் தலைவருக்கான தேர்தலையும் அந்தத் தேர்தல் குழு நடத்தும்” என்றும் சுப்ரா தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

அண்மையில் செல்லியல் வெளியிட்ட செய்தியொன்றில் மஇகாவின் இரண்டு தரப்புகளும் விஜேந்திரனை தேர்தல் குழுத் தலைவராக நியமிக்க ஒருமனதாக ஒப்புக் கொண்டுள்ளன என்ற விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது சங்கப் பதிவகத்தால் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட 2009 மத்திய செயலவை விஜேந்திரனை தேர்தல் குழுத் தலைவராக ஏற்றுக் கொண்டுள்ளது.