கொழும்பு, மார்ச் 13 – இந்திய பிரதமர் மோடி இலங்கை அதிபர் சிறிசேன முன்னிலையில் 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. பிரதமர் மோடி அதிபர் – சிறிசேன கூட்டாக பத்திரிக்கை யாளர்களுடன் சந்தித்து பேட்டி அளித்தனர்.
முதல் பயணமாக சிறிசேன இந்தியா வந்தது எங்களுக்கு கவுரவம் என்று மோடி தெரிவித்தார். இந்தியா-இலங்கை இடையிலான நட்புறவுக்கு பொருளாதார ரீதியான உறவு முக்கிய காரணியாக உள்ளது என்று அவர் கூறினார்.
டெல்லி-கொழும்பு இடையே நேரடி விமான சேவை இயக்கப்படும் என்று மோடி கூறினார். இருநாட்டு உறவின் இதயம் மக்கள்தான் எனவும் பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இரு நாட்டு மீனவர்களும் விரைவில் பிரச்சனைக்கு தீர்வுக்காண மோடி வலியுறுத்தினார்.
மீனவர்கள் பிரச்சனை குறித்து சிறிசேனவுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி தகவல் தெரிவித்தார். மேலும் திரிகோணமலையை மேம்படுத்த இந்தியா உதவும் என்றும் மோடி திட்டவட்டமாக கூறினார்.