Home உலகம் கிரிக்கெட்: வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி!

கிரிக்கெட்: வங்காள தேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி!

730
0
SHARE
Ad

new-zealand-odi-team-700ஹாமில்டன், மார்ச் 13 – நியூசிலாந்து – வங்காள தேசத்திற்கு இடையேயான உலகக்கோப்பை லீக் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. இப்போட்டியில் 3 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த வங்காள தேசம் மெக்முதுல்லா சதத்தால் 288 ரன்கள் குவித்தது. 289 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து களம் இறங்கியது.  நியூசிலாந்து அணியின் குப்தில் சிறப்பாக விளையாடி 105 ரன்களும், டெய்லர் 56 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

Cricket_1_NZ_vs_Bஇறுதியில் அதிரடியாக விளையாடிய ஆண்டர்சன் 39 ரன் எடுத்தார். வங்காள தேச அணியின் தரப்பில் சாகிப் அல்ஹஸன் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தொடர்ந்து புள்ளி பட்டியளில் முதலிடத்தில் உள்ளது.