Home நாடு இன்று மஇகா – சங்கப் பதிவக நீதிமன்ற வழக்கு!

இன்று மஇகா – சங்கப் பதிவக நீதிமன்ற வழக்கு!

781
0
SHARE
Ad

MIC Logo and Flagகோலாலம்பூர், மார்ச் 16 – கடந்த வாரம் ஒத்தி வைக்கப்பட்ட மஇகா – சங்கப் பதிவகம் இடையிலான இரண்டு வழக்குகள் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நடைபெறும்.

1966 சங்கங்களின் சட்டம் குறித்த பல்வேறு சர்ச்சைகளை தீர்க்கும் முக்கிய வழக்காக இந்த மஇகா வழக்குகள் பார்க்கப்படுகின்றன. மஇகா தேர்தலை ரத்து செய்யும் அதிகாரம் சங்கப் பதிவகத்திற்கு இருக்கிறதா என்ற கேள்விக்கு விடையளிக்கும் அதே நேரத்தில், ஒரு கட்சியின் உள்விவகாரத்தில் எந்த அளவுக்கு சங்கப் பதிவகம் தலையிடலாம் என்பதையும் இந்த வழக்கு நிர்ணயம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த வழக்குகளின் தீர்ப்பின்படிதான் மஇகாவில் இரண்டு தரப்புக்கும் இடையில் எழுந்துள்ள தலைமைத்துவப் போராட்டத்தின் திசையும் நிர்ணயிக்கப்படும் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

#TamilSchoolmychoice

அதே வேளையில் இந்த வழக்கில் தன்னை மூன்றாம் தரப்பாக சேர்த்துக் கொண்டு தனது தரப்பு வாதத்தையும் செவிமெடுக்க வேண்டும் என முன்னாள் மஇகா இளைஞர் பகுதித் தலைவர் டத்தோ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் சமர்ப்பித்திருக்கும் விண்ணப்பம் மீதும் உயர்நீதிமன்றம் இன்று முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.