Home உலகம் லங்காவி லீமா 2015 ஒத்திக்கை: நடுவானில் விமானங்கள் மோதி விபத்து!

லங்காவி லீமா 2015 ஒத்திக்கை: நடுவானில் விமானங்கள் மோதி விபத்து!

821
0
SHARE
Ad

?????????????????????????????????????லங்காவி, மார்ச் 16 – லங்காவி அனைத்துலக  கப்பல் மற்றும் வான் படை கண்காட்சி 2015 ஒத்திகையில் ஈடுபட்டிருந்த விமானங்கள் இரண்டு, நேற்று ஒன்றுக்கொன்று மோதி விபத்திற்குள்ளானது.

என்றாலும், அதில் பயணம் செய்த 4 இந்தோனேசிய விமானிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளனர்.

விபத்திற்குள்ளான விமானத்தில் ஒன்று லங்காவி விமான நிலையத்திற்கு அருகிலும், மற்றொன்று அருகில் இருந்த கிராமப் பகுதியான கம்போங் கேலாமிலும் விழுந்து நொறுங்கியது.

#TamilSchoolmychoice

இரண்டு இருக்கைகள் கொண்ட அந்த விமானங்களில் இருந்த நான்கு விமானிகளும், விமானத்தில் இருந்து பாராசூட் மூலமாக தரையில் குதித்து உயிர் தப்பினர்.

நேற்று மதியம் 1.45 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகவும், காயங்களுடன் உயிர் தப்பிய விமானிகள் தற்போது லங்காவி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல்துறை அறிவித்துள்ளது.