Home நாடு பிகேஆர் உதவித்தலைவர் நூருல் இசா கைது!

பிகேஆர் உதவித்தலைவர் நூருல் இசா கைது!

562
0
SHARE
Ad

NURULகோலாலம்பூர், மார்ச் 16 – பிகேஆர் கட்சியின் தேசிய உதவித் தலைவரும், எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் மகளுமான நூருல் இசா இன்று காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் நீதித்துறை குறித்து அவதூறாகப் பேசியதற்காக தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வாரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுல்கிப்ளி நோர்டின், நூருல் இசாவிற்கு எதிராக காவல்துறையில் அளித்த புகாரில், நூருல் இசா தனது தந்தை அன்வாரின் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, நீதித்துறையை அவமதிக்கும் கருத்துக்களை கூறியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும் விரிவான செய்திகள் தொடரும்…