Home நாடு தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நூருல் இசாவுக்கு தடுப்புக் காவல் – உலகமெங்கும் தலைப்புச் செய்தியானது

தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நூருல் இசாவுக்கு தடுப்புக் காவல் – உலகமெங்கும் தலைப்புச் செய்தியானது

495
0
SHARE
Ad

Wan aziza2கோலாலம்பூர், மார்ச் 17 – லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரான நூருல் இசா அண்மையில் கோலாலம்பூரில் நடைபெற்ற “கித்தா லாவான்” (நாங்கள் போராடுவோம்) பேரணியில் ஆற்றிய உரை தொடர்பில் தேச நிந்தனை சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் அறிவித்துள்ளார்.

அதே சட்டத்தின் கீழ், நீதித் துறைக்கு எதிராக அவமரியாதை தொனிக்கும் கருத்துகளை கூறியதற்காகவும் அவர் விசாரிக்கப்படுகின்றார்.

நீதித் துறை “தங்களின் மனசாட்சியை ஒரு பேயிடம் விற்றுவிட்டார்கள்” என்று அவர் கூறியிருந்த கருத்து தொடர்பில் அவர் விசாரிக்கப்படுகின்றார் என்றும் காலிட் அபு பாக்கார் விளக்கினார்.

#TamilSchoolmychoice

நூருலின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் விடுதலை செய்யப்படுவார் என்றும் காலிட் கூறியுள்ளார்.

நேற்று பிற்பகல் 3.55 மணியளவில் தலைநகர் டாங் வாங்கி காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

Wan aziza1

பின்னர் அவர் ஜிஞ்சாங் காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு நேற்றிரவு அங்கே தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

கடந்த மார்ச் 10ஆம் தேதி மக்களவையில் ஆற்றிய உரையின் போது, நூருல் “நீதிபதிகள், தங்களின் அரசியல் முதலாளிகளின் நெருக்குதலுக்கு அடிபணிந்து விட்டனர்” என்றும் “சுதந்திரமான நீதிபரிபாலனத் துறையை  இந்நாட்டில் கொன்றுவிட்ட குற்றத்தில் அவர்கள் கூட்டாளிகளாக இருந்திருக்கின்றனர்” என்றும் குறைகூறிப் பேசியிருந்தார்.

Wan aziza

இதற்கிடையில் நூருல் இசா கைது நாடு முழுமையிலும் பரபரப்பை ஏற்படுத்தியதோடு, அவரது ஆதரவாளர்களும், சமூகப் போராளிகளும், அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஜிஞ்சாங் காவல் நிலையம் முன்பு மெழுகுவர்த்தி ஏற்றி, அமைதியான முறையில் குந்தியிருப்பு போராட்டம் நடத்தினர்.

இதற்கிடையில் நூருல் இசாவின் கைதும், தடுப்புக் காவலும் உலகம் எங்கும் உள்ள பல தகவல் ஊடகங்களில் முக்கியத்துவம் மிக்க தலைப்புச் செய்தியாக இடம் பெற்றுள்ளது.