கோலாலம்பூர், மார்ச் 17 – பெட்டாலிங் ஜெயா உத்தாரா நாடாளுமன்ற உறுப்பினர், டோனி புவாவும் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைக்கப்படுவார் என காவல் துறைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் தனது டுவிட்டர் அகப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
‘Royal my foot’ என டோனி புவா கூறியிருப்பதன் உண்மையான அர்த்தம் என்ன? அது மலாய் ஆட்சியாளர்களைக் குறிக்கின்றதா? என காலிட் அபு பாக்கார் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
இருப்பினும், தனது டுவிட்டர் வாசகத்தை உடனடியாகத் திருத்தம் செய்த டோனி புவா “bastards” என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற வார்த்தைகளை அழித்து விட்டார்.
இதனைத் தொடர்ந்து அவரும் காவல் துறையினரால் விசாரிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகின்றது.
-பெர்னாமா