Home உலகம் கிரிக்கெட்: இன்று முதல் கால் இறுதி சுற்றில் தென் ஆப்ரிக்காவுடன் இலங்கை மோதல்!

கிரிக்கெட்: இன்று முதல் கால் இறுதி சுற்றில் தென் ஆப்ரிக்காவுடன் இலங்கை மோதல்!

475
0
SHARE
Ad

Sri-Lanka-vs-South-Africa-3rd-T20-Live-Score-Full-Highlights-6-Aug-2013-asportsnewsசிட்னி, மார்ச் 18 – உலக கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தொடரின் முதலாவது கால் இறுதியில், தென் ஆப்ரிக்கா-இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடக்கும் இப்போட்டி, மலேசிய நேரப்படி காலை 11.30 மணிக்கு தொடங்குகிறது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் இணைந்து நடத்தும் 11-வது உலக கோப்பை போட்டித் தொடர், பரபரப்பான கால் இறுதி கட்டத்தை அடைந்துள்ளது. மொத்தம் 14 அணிகள் இரு பிரிவுகளாக லீக் ஆட்டங்களில் மோதியதில் ஏ பிரிவில் முதல் 4 இடங்களைப் பிடித்த நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேச அணிகளும்,

South-Africa-vs-Sri-Lankaபி பிரிவில் இருந்து இந்தியா, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும் கால் இறுதிக்கு முன்னேறின. இங்கிலாந்து உள்பட மொத்தம் 6 அணிகள் பரிதாபமாக வெளியேறின. இந்த நிலையில், முதலாவது கால் இறுதியில் தென் ஆப்ரிக்கா  இலங்கை அணிகள் இன்று பலப்பரீட்சையில் இறங்குகின்றன.