Home உலகம் இஸ்ரேல் தேர்தல் – பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமராகிறார்! 

இஸ்ரேல் தேர்தல் – பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் பிரதமராகிறார்! 

584
0
SHARE
Ad

netanyahu-story-650_031815111552டெல் அவிவ், மார்ச் 19 – இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் நெதன்யாகுவின் லிகுட் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் தனது பதவியை தக்க வைத்துக் கொண்டார்.

பெஞ்சமின் நெதன்யாகு இஸ்ரேலின் பிரதமாராக கடந்த 6 ஆண்டுகளாக பதவி வகித்து வருகிறார். அவரது பதவிக் காலம் முடிவதற்கு சுமார் 3 ஆண்டுகள் இருந்த நிலையில், நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்கூட்டியே அறிவித்தார்.

60 லட்சம் வாக்காளர்களை உள்ளடக்கிய இஸ்ரேல் தேர்தல் நேற்று முன்தினம் தொடங்கியது. சுமார் 25 கட்சிகள் போட்டியிட்ட இந்த தேர்தலின் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

#TamilSchoolmychoice

ஊடகங்களின் கணிப்புகளைப் போல் நெதன்யாகுவின் லிகுட் கட்சி 30 இடங்களை வென்றது. இஸ்ரேலைப் பொறுத்தவரையில் எந்தக் கட்சியும் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதில்லை. விகிதாசார அடிப்படையில் நாடாளுமன்றத்துக்கு உறுப்பினர்களை நியமிக்கும்.

அதன் படி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றிய லிகுட் கட்சி, வலது சாரி கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கிறது. நெதன்யாகு மீண்டும் பிரதமராக அறிவிக்கப்பட்டார்.

இது தொடர்பாக நெதன்யாகு கூறுகையில், “இந்த வெற்றி தனித்த மனிதர்களுக்கான வெற்றி அல்ல, ஒட்டுமொத்த இஸ்ரேலுக்கான வெற்றி. இதில் நான் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.

நெதன்யாகு தனது கடந்த ஆட்சி காலத்தில் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் அதிக அக்கறை காட்டவில்லை என்றாலும், பாலச்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்ததால் மக்கள் மத்தியில் அவரின் செல்வாக்கு குறையவில்லை என்று பத்திரிக்கைகள் தெரிவித்துள்ளன.