Home இந்தியா கிரிகெட் காலிறுதிச் சுற்று: வங்கதேசத்திற்கு எதிராக 302 ஓட்டங்கள் குவித்தது இந்தியா!

கிரிகெட் காலிறுதிச் சுற்று: வங்கதேசத்திற்கு எதிராக 302 ஓட்டங்கள் குவித்தது இந்தியா!

569
0
SHARE
Ad

TamilDailyNews_7400738000870மெல்போன், மார்ச் 19 – உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் 2-வது காலிறுதியில் இன்று இந்தியா – வங்கதேச அணிகள் விளையாடி வருகிறது. முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில்  முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் – தவான் ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தது.

தவான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனை அடுத்து களமிறங்கிய கோலி மற்றும் ரகானே ஏமாற்றம் அளித்தனர். கோலி 4 ரன்களிலும், ரகானே 19 ரன்களிலும் ஆட்டமிழந்தது.

#TamilSchoolmychoice

CRICKET-WC-2015-IND-ZIMபின்னர் களமிறங்கிய ரெய்னாவுடன் ஜோடி சேர்ந்த ரோகித் சர்மா இருவரும் அதிரடியாக ஆடி ரன் குவித்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் சார்மா 108 பந்துகளில் 10 பவுண்டரி, 1 சிக்சருடன் சதம் அடித்து அசத்தினர்.

உலககோப்பையில் ரோகித் சர்மா தனது முதல் சதத்தை பதிவு செய்தார். அதிரடியாக விளையாடிய சுரேஷ் ரெய்னா 57 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 65 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

rohit-sharma-century-bangladeshரோகித் சர்மா 126 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரோகித் – ரெய்னா ஜோடி 122 ரன்கள் சேர்த்தது. டோனி 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இறுதியில் அதிரடியாக ஆடிய  ரவிந்திர ஜடேஜா 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வங்கதேசம் களமிறங்க உள்ளது.