Home கலை உலகம் விஷ்ணு நடிக்கும் புதியப் படத்தின் தலைப்பு ’போடா ஆண்டவனே என் பக்கம்’!

விஷ்ணு நடிக்கும் புதியப் படத்தின் தலைப்பு ’போடா ஆண்டவனே என் பக்கம்’!

653
0
SHARE
Ad

podaசென்னை, மார்ச் 19 -’இன்று நேற்று நாளை’, ’கலக்குறே மாப்ளை’,  என விஷ்ணு இரு படங்களில் நடித்து வருகிறார். மேலும் ‘விஜய் சேதுபதியுடன் இணைந்து ‘இடம் பொருள் ஏவல்’ படம் வெளியீட்டிற்கு காத்திருக்கிறது.

இப்படங்களை அடுத்து விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்திற்கு ‘போடா ஆண்டவனே என் பக்கம்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஆர்.கண்னன் இயக்கும் இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக ‘பிசாசு’ படத்தின் நாயகி பிரக்யா நடிக்க இருக்கிறார்.

ஆர்.கண்ணன் ’ஜெயம் கொண்டான்’, கண்டேன் காதலை’, வந்தான் வென்றான்’, ’சேட்டை’, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படங்களை இயக்கியவர். இப்படத்தின் படபிடிப்பு மே மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. சென்னையில் தொடர்ந்து 45 நாட்கள் படபிடிப்பு நடைபெறும்.

#TamilSchoolmychoice

பாடல் காட்சிகள் கனடாவில் 10 நாட்கள் படமாக்க உள்ளது. இப்படத்திற்காக பெரும் பொருட்செலவில் பிரம்மாண்டமான சாலை வடிவமைக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர். காதல், நகைச்சுவை கலந்த படமாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. படம் செப்டம்பர் மாதம் 2015 வெளியிடும் திட்டத்தில் உள்ளனர் படக்குழு.