Home வாழ் நலம் இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் அத்திப்பழம்!

இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் அத்திப்பழம்!

2179
0
SHARE
Ad

Figs_02மார்ச் 19 – அத்திப்பழம் உணவை விரைவில் ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத் தந்து, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது. அத்திப் பழத்தை சாப்பிட்டால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.

அத்திப்பழம் சாப்பிட்டால் வாய்நாற்றம் நீங்கும். அத்திப்பழம் உண்பதால் உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.

figs1நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 5 பழங்களை இரவில் சாப்பிட வேண்டும். தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக வளரும்.

#TamilSchoolmychoice

இதில் முழு அளவு ஊட்டச்சத்து இருக்கின்றது. அத்தி பழத்தில் புரதச்சத்து, சர்க்கரை சத்து, பாஸ்பரஸ் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் இருக்கிறது.

figs-ripeமற்ற பழங்களைவிட அத்திப்பழத்தில் இந்த சத்துக்கள் நாலு மடங்கு அதிகமாக இருப்பதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன. இதைத் தவிர வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிக அளவிலும் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பதப்படுத்தப்பட்ட அத்திப்பழங்கள் யுனானி நாட்டு மருந்துக் கடைகளில் விற்கப்படுகின்றன. இதை சீமை அத்திப்பழம் என்று கூறுவார்கள சீமை அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது.