மெல்போன், மார்ச் 19 – வங்கதேசத்தை 109 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரையிறுத்திக்குள் நுழைந்தது இந்தியா. உலககோப்பை கிரிக்கெட் போட்டியின் 2-வது காலிறுதியில் இந்தியா -வங்கதேச அணிகள் மோதின.
முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது.
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் – தவான் ஜோடி சிறப்பான அடித்தளம் அமைத்து கொடுத்தது. தவான் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து சிறப்பாக விளையாடிய ரோகித்சர்மா 126 பந்துகளில் 14 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 137 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் அதிரடியாக ஆடிய ரவிந்திர ஜடேஜா 10 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து 50 ஓவர்களில் முடிவில் இந்தியா 6 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்கள் குவித்தது. கடைசியில் 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய வங்கதேசம்.
இந்திய வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி வந்தனர். இறுதியில், வங்கதேசம் 45 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் யாதவ் 4, சமி, ஜடேஜ் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதனையடுத்து இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்த போட்டியிலும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் உலககோப்பையில் தொடர்ந்து 70 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய புதிய சாதனையை படைத்துள்ளது.
வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுத்திக்குள் நுழைந்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்தார். சிறந்த அணி, சிறப்பான ஆட்டம் என்று அவர் டுவிட் செய்த தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.