Home நாடு பழனிவேலுவால் நீக்கப்பட்ட 5 மஇகா உறுப்பினர்கள் யார்?

பழனிவேலுவால் நீக்கப்பட்ட 5 மஇகா உறுப்பினர்கள் யார்?

477
0
SHARE
Ad

கோலாலம்பூர், மார்ச் 20 – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் 5 மஇகா உறுப்பினர்களை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியிலிருந்து நீக்கியுள்ளார் என மலேசியகினி இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, அந்த 5 பேர் யார் என்ற கேள்விக் குறியும் பரபரப்பும் கட்சியில் தற்போது எழுந்துள்ளது.

zul_palanivel_c57783_11622_307_v06மஇகா தலைமையகத்தை ‘முற்றுகையிட்ட’ சம்பவத்தில் அந்த 5 பேரும் நேரடியாக சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்ற காரணத்தைக் காட்டி பழனிவேல் அந்த 5 பேரை கட்சியிலிருந்து நீக்கியுள்ளார்.

மஇகா தலைமையக ஊழியர் ஒருவரைத் தாக்கியது மற்றும் மற்ற தலைமையக ஊழியர்களை மிரட்டியது போன்ற தகாத காரியங்களிலும் இந்த 5 பேரும் ஈடுபட்டனர் என்றும் இவர்களின் செயலால் மஇகா தலைமையகம் 5 நாட்கள் மூடப்பட்டு அதனால் கட்சியின் அன்றாட அலுவல்கள் பாதிக்கப்பட்டன என்றும் பழனிவேல் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

ஆனால், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட அந்த 5 பேர் யார் என்பதை பழனிவேல் பெயர் குறிப்பிடவில்லை.