Home கலை உலகம் என்னை பலாத்காரம் செய்ய துணிச்சல் இருக்கிறதா? – ஆந்திர சட்டசபையில் ரோஜா அநாகரீகம் (காணொளியுடன்)

என்னை பலாத்காரம் செய்ய துணிச்சல் இருக்கிறதா? – ஆந்திர சட்டசபையில் ரோஜா அநாகரீகம் (காணொளியுடன்)

742
0
SHARE
Ad

rojaஆந்திரா, மார்ச் 20 – நடிகையும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான ரோஜா, தன்னை பலாத்காரம் செய்ய துணிச்சல் இருக்கிறதா என்று பத்திரிகையாளர் ஒருவரை பார்த்து கேட்டுள்ளார்.

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரோஜா ஆந்திர மாநில சட்டசபையில் அநாகரீகமாக நடந்து கொண்ட காணொளி ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், அந்த பரபரப்பு அடங்குவதற்குள் அவர் தற்போது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் பேசுகையில், “மூத்த தெலுங்குதேச தலைவரான சந்திரபாபு நாயுடு மற்றும் போண்டா உமா உள்ளிட்டோர் எங்களுக்கு எதிராக நடந்து கொள்கின்றனர்”.

#TamilSchoolmychoice

“அவரகள் எங்களை பற்றிய காணொளிகளை அவர்கள் வெளியிட்டுள்ளனர். மேலும், அவர்களால் என்னை காயப்படுத்த என்னை கொலை செய்ய தான் முடியும். என்னை பாலியல் பலாத்காரம் செய்ய அவர்களுக்கு துணிச்சல் இல்லை என்று தெரிவித்துள்ளார்”.

“இதனை கேட்ட நிருபர் அதிர்ச்சியடைந்து, என்ன இவ்வாறு கூறுகிறீர்கள் என்று கேட்ட போது, ரோஜா அந்த பத்திரிகையாளரை பார்த்து, என்னை பலாத்காரம் செய்ய உங்களுக்கு துணிச்சல் இருக்கிறதா” என்று கேட்டுள்ளார்.