Home Featured இந்தியா சந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் – நடிகை ரோஜா தகவல்!

சந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் – நடிகை ரோஜா தகவல்!

912
0
SHARE
Ad

Chandrababu Naidu-Actres rojaநகரி – சந்திரபாபு நாயுடு மீது சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று நடிகை ரோஜா பேட்டியளித்துள்ளார். ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவி ஏற்ற 2 ஆண்டில் ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் கோடிக்கு ஊழல் செய்து இருப்பதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி குற்றம்சாட்டி உள்ளார்.

சந்திரபாபு நாயுடுவின் ஊழலை பட்டியலிட்டு புத்தகமாக அச்சடித்த அவர் அதனை டெல்லி சென்று பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து வழங்கினார். ஊழலுக்கு எதிராக தான் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு திரட்டினார்.

தலைநகர் அமைக்கும் விஷயத்தில் சந்திரபாபுநாயுடு மகன் லோகேஷ் செய்த ஊழல் குறித்தும் புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார். இதுபற்றி லோகேஷ் கூறும்போது ஊழல் பற்றி எங்கேயும் விவாதிக்க தயார் என்று குறிப்பிட்டு இருந்தார்.

#TamilSchoolmychoice

இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகை ரோஜா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- சந்திரபாபு நாயுடு மீதான ஊழல் புகார் குறித்தும் அவருக்கு எதிராக நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவு கேட்கும் ஜெகன் மோகன் ரெட்டி டெல்லி சென்று அனைத்து கட்சி தலைவர்களை சந்தித்தார். சந்திரபாபு நாயுடு ஊழலை அறிந்த அரசியல் கட்சி தலைவர்கள் ஆச்சரியப்பட்டனர்.

ஊழல் புகாருக்கு எந்தவித ஆதாரமும் இல்லை என்றும், ஆந்திராவின் நன்மதிப்பை ஜெகன்மோகன் கெடுக்கிறார் என்றும் லோகேஷ் கூறியுள்ளார்.
உண்மையிலேயே அவர்கள் குற்றமற்றவர்கள் என்றால் இதுபற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

அல்லது பதவியில் உள்ள நீதிபதியை கொண்டு விசாரணை நடத்த வேண்டும். அவ்வாறு விசாரணை நடக்கும் பட்சத்தில் அவர்களிடம் எங்களிடம் உள்ள ஆதாரத்தை சமர்ப்பிப்போம். எந்தவித தவறும் செய்யவில்லை என்றால் ஏன் விசாரணைக்கு பயப்பட வேண்டும் என ரோஜா கூறினார்.