Home Featured தமிழ் நாடு தெளிவாக முடிவெடுக்க தெரியாதவர் விஜயகாந்த் – நடிகர் செந்தில் பிரச்சாரம்!

தெளிவாக முடிவெடுக்க தெரியாதவர் விஜயகாந்த் – நடிகர் செந்தில் பிரச்சாரம்!

632
0
SHARE
Ad

vijayakandhஈரோடு – ஈரோடு பகுதியில் சூளை, கொல்லம் பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் நடிகர் செந்தில் பிரசாரம் செய்து பேசினார். அப்போது அவர் பேசுகையில்:– தமிழ்நாட்டில் முதல்வர் ஜெயலலிதா எண்ணற்ற பல திட்டங்களை தீட்டி நிறைவேற்றி உள்ளார்.

ஏழை–எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மிக்சி, கிரைண்டர், மின்விசிறியை வழங்கி உள்ளார். விவசாயிகள் பயன்பெறும் வகையில் இலவச ஆடுகளை வழங்கி உள்ளார். அந்த ஆடுகள் பல குட்டிகளை ஈன்று விவசாயிகளின் வாழ்க்கை தரமும் உயர்ந்துள்ளது.

தே. மு. தி. க. தலைவர் விஜயகாந்த் முதல்வர் ஆகும் கனவில் மிதக்கிறார். அவரது கனவு பலிக்காது. தமிழ்நாட்டில் ஒரு போதும் அவர் முதல்வர் ஆக முடியாது. எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுக்க முடியாத விஜயகாந்தால் எப்படி ஆட்சி நடத்த முடியும்? விஜயகாந்த் அவரது மனைவி பிரேமலதா பிடியில் உள்ளார்.

#TamilSchoolmychoice

அவர்தான் எந்த முடிவையும் எடுத்து வருகிறார். தமிழகத்துக்கு மேலும் பல நல்ல திட்டங்களை நல்லவரான ஜெயலலிதா ஒருவரால் மட்டும் தான் கொண்டுவர முடியும். கெட்டவர்களால் முடியாது. நல்லவரான ஜெயலலிதாவை மீண்டும் முதலமைச்சராக்குங்கள் கெட்டவர்களை– ஊழல் வாதிகளை விரட்டியடிங்கள் என நடிகர் செந்தில் பேசினார்.