Home உலகம் பிரிட்டன் ராயல் சமூகத்தின் தலைவராக தமிழர் வெங்கி நியமனம்!

பிரிட்டன் ராயல் சமூகத்தின் தலைவராக தமிழர் வெங்கி நியமனம்!

645
0
SHARE
Ad

venkiலண்டன், மார்ச் 20 – பிரிட்டனின் பெரும் மதிப்பு மிக்க ‘ராயல் சமூகம்’ (Royal Society)-ன் தலைவராக அமெரிக்கத்தமிழரும், நோபல் பரிசு பெற்ற அறிவியலாளருமான வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

63 வயதான வெங்கி என்கிற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் தமிழ்நாட்டின் சிதம்பரத்தில் பிறந்தவர். அமெரிக்காவில் தனது உயர் படிப்புகளை முடித்து வேதியல் தொடர்பான தொடர் ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வந்தார்.

கடந்த 16 வருடங்களுக்கு முன் இங்கிலாந்தில் குடியேறிய அவருக்கு, 2009-ம் ஆண்டு அனைத்து உயிரணுக்களிலும் உள்ள ‘ரைபோசோம்’ (ribosome)-களின் சிக்கலான அமைப்பினை துல்லியமாக கண்டறிந்ததற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் பிரிட்டனின் ராயல் சமூகத்தின் புதிய தலைவராக வெங்கி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவர் எதிர்வரும் டிசம்பர் 1-ம் தேதி முதல் இந்த உயரிய பொறுப்பை ஏற்றுகொள்வார் என்று கூறப்படுகிறது.

இது தொடர்பான முடிவுகள் நேற்று முன்தினம் நடைபெற்ற  ராயல் சமூகத்தின் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ராயல் சமூகத்தின் தலைவராக தான் தேர்வு செய்யப்பட்டது குறித்து வெங்கி கூறுகையில்,

“16 வருடங்களுக்கு முன், அமெரிக்காவில் இருந்து பிரிட்டனில் குடியேறிய தன்னை ராயல் சமூகம் தலைவராக தேர்வு செய்தது நெஞ்சை நெகிழச்செய்கிறது”.

“ராயல் சமூகம் பிரிட்டனுடையது தான் உலக நாடுகளுக்கும் பொதுவானது. ராயல் சமூகத்தின் தலைவராக பொறுப்பேற்றதும், கவனத்தில் கொள்ள வேண்டிய பல பிரச்சனைகளை திறம்பட கையாள்வதற்கு தயாராக உள்ளேன்” என்று அவர் கூறியுள்ளார்.