Home கலை உலகம் நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி

நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி

1045
0
SHARE
Ad

சென்னை: பிரபல நடிகையாக இருந்து பின்னர் ஆந்திர அரசியல்வாதியாக மாறிய நடிகை ரோஜா. இயக்குநர் செல்வமணியை மணந்தவர். 50 வயதான ரோஜா, கால் வீக்கம் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில்  வெள்ளிக்கிழமை இரவு (ஜூன் 10) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

தமிழ் நாட்டில் பிரபல நடிகையாக இருந்தாலும் ஆந்திரா அரசியலில் தீவிரமாக ஈடுபட்டவர் ரோஜா. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியில் இணைந்த ரோஜா, நகரி தொகுதியில் 2014-ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் தற்போது ஆந்திராவின் சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் இளைஞர் மேம்பாட்டு அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில் அமைச்சர் ரோஜா திடீரென அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

#TamilSchoolmychoice

கால் வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.