Home கலை உலகம் அருள் நுண்கலைப் பள்ளியின் முதல் நிலை அரங்கிசை – 3

அருள் நுண்கலைப் பள்ளியின் முதல் நிலை அரங்கிசை – 3

678
0
SHARE
Ad

அருள் நுண்கலைப் பள்ளியின்
முதல் நிலை அரங்கிசை – 3

கிள்ளானில் இயங்கிவரும் அருள் நுண்கலைப் பள்ளியின் “முதல் நிலை அரங்கிசை – 3”. எதிர்வரும் ஜூன் 17 ஆம் நாள் 2023 (17/06/2023), சனிக்கிழமை, AUDITORIUM TAN SRI JEFFRY CHEAH, SUBANG JAYA அரங்கத்தில் மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

பள்ளியில் நீண்ட காலம் வாய்ப்பாட்டுப் (சங்கீதம்) பாடம் கற்று, நல்ல தேர்ச்சியைக் காட்டிவரும் மாணவர்களை அடையாளம் கண்டு, முதல் முதலாக மேடையில் தனித்துப் பாடும் வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதே இந்த “முதல் நிலை அரங்கிசை”யின் நோக்கமாகும்.

பள்ளியின் முதலாம் இரண்டாம் “முதல் நிலை அரங்கிசைகள்” முறையே 2016, 2019 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன. மூன்றாவது முறையாக நடைபெறவுள்ள முதல் நிலை அரங்கிசையில் அரங்கேறும் மாணவர்கள், செல்வி கிருபாஷினி விஜயகுமார், செல்வி ஹத்திஸ்வரி ஆசைதம்பி, செல்வி நிரஞ்சனி சுப்பிரமணியம், செல்வன் அருள்வாணன் மனோகரன், செல்வி கிருத்யா தினகரன் , செல்வி வாஷினி சந்திர சேரன், செல்வன் ஜித்தேந்திரன் குணசேகரன், செல்வி லினேயா தின௧ரன் ஆகியோராவர். இவர்கள் எண்மரும், பள்ளியின் முதல்வர் சங்கபூசன் திருமதி அல்லிமலர் மனோகரன் அவர்களின் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர், சிவநெறிச் செல்வர்,சங்கபூசன், தங்க கணேசன் அவர்கள் நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்கவுள்ளார். மலேசியத் திருமுருகன் திருவாக்குத் திருபீட நாயகர், தவத்திரு பாலயோகி சுவாமிகள் அவர்கள் ஆசியுரை வழங்கவுள்ளார்.

இசைக்கலைமணி திரு கார்த்திகேயன் கணபதி (வயலின்), சுநாத நந்தி இரத்ன கலா திரு. சிவகுமரேசன் இந்திரன் (மிருதங்கம்) மற்றும் திரு இரவிசங்கர் சுப்பிரமணியம் (முகர்சிங்) ஆகியோர் இந்நிகழ்வில் பின்னணி இசைக்கவுள்ளனர்.

தமிழிசை ஆர்வலர்கள் மகிழ்ந்து பாராட்டும் வகையிலே பாடல்கள் வடிவமைக்கப்பட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளன. இது ஓர் இலவச நிகழ்ச்சி என்பதால் இசை விரும்பிகள் அனைவரும் திரண்டு வந்து முதல் நிலை அரங்கேறும் மாணவச் செல்வங்களை வாழ்த்தி அருளுமாறு அருள் நுண்கலைப் பள்ளியின் நிர்வாகி திரு.சு.மனோகரன் அவர்களும் மாணவர்களின் பெற்றோரும் அன்போடு கேட்டுக் கொள்கிறார்கள்.

தொடர்புக்கு – திரு. மனோகரன் சுப்பிரமணியம் 019- 9271722,
திரு. தினகரன் பெருமாள் 012-3391243