புதுடெல்லி, மார்ச் 20 – முப்தி முகமது சயீத் தலைமையிலான ஜம்மு-காஷ்மீர் மாநில அரசு, பிரிவிணைவாதிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாவிட்டால் முப்தி முகமது கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம், நரன்புரா சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அமித்ஷா, தேசிய நலனில் பாஜக ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது.
இதனை நாட்டு மககளிடம் பாஜகவினர் கொண்டு செல்ல வேண்டும். காஷ்மீர் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படுத்தி அங்கு அமைதியை நிலைநாட்டவே பி.டி.பி. என்ற மக்கள் ஜனநாயக கட்சி அரசுக்கு பாஜக ஆதரவு வழங்கியது.
இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு காணப்படும். பிரிவிணைக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாடு தொடர்ந்தால் முப்தி முகமது கூட்டணி அரசில் இருந்து வெளியேற பாஜக தயங்காது என்றார் அமித்ஷா.