Home உலகம் விமானத்தில் ஆடைகளைக் களைந்த இங்கிலாந்து பெண் கைது

விமானத்தில் ஆடைகளைக் களைந்த இங்கிலாந்து பெண் கைது

536
0
SHARE
Ad

Aeroplaneஇலண்டன், மார்ச் 22 – விமானப் பயணத்தின் போது அளவுக்கதிகமான மது போதையில் நடு வானில் தனது ஆடைகளைக் களைந்து அநாகரிகமாக நடந்து கொண்ட இங்கிலாந்து பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெற்கு லண்டனைச் சேர்ந்த 46 வயதான அந்தப் பெண், கடந்த 19ஆம் தேதியன்று இத்தகைய அநாகரிக செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

அன்றைய தினம் ஜமைக்காவில் இருந்து லண்டன் வந்த விமானத்தில் அவர் பயணம் செய்ததாகவும், ஆடைகளைக் களைந்து ஆபாசமாக தன்னை வெளிப்படுத்திக் கொண்ட வகையில் விமானப் பயணத்திற்கு இடையூறு விளைவித்ததாகவும் ‘தி மிரர்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அந்த விமானம் லண்டனில் தரை இறங்கிய கையோடு அந்தப் பெண்மணி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

அந்தப் பெண் பயணி குறித்து இலண்டன் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்றும், விமானம் தரையிறங்கியதும் நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.