Home நாடு ஹூடுட் சட்டம்: பாஸ் கட்சிக்கு ஆதரவு இல்லை என பிகேஆர் அறிவிப்பு

ஹூடுட் சட்டம்: பாஸ் கட்சிக்கு ஆதரவு இல்லை என பிகேஆர் அறிவிப்பு

539
0
SHARE
Ad

PKR-Logo-Sliderகோலாலம்பூர், மார்ச் 22 -ஹூடுட் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பாஸ் கட்சிக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பிகேஆர் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக கொண்டு வரப்படும் மசோதாவை நாடாளுமன்றத்தில் ஆதரிக்கப் போவதில்லை என அக்கட்சியின் அரசியல் மையக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அக்கட்சி சார்பில் அறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

ஹூடுட் சட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ள உத்தேச தீர்மானங்கள் குறித்து கூட்டணி கட்சிகளுக்கு பாஸ் கட்சி முழுமையான விவரங்களை தெரிவிக்கவில்லை என பிகேஆர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கூட்டணிக் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி அண்மையில் ஹூடுட் சட்டத்தை கிளந்தான் அரசு அம்மாநில சட்டமன்றத்தில் தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து பிகேஆர் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இது பக்காத்தான் கூட்டணியை பிளவுபடுத்துவதற்கான முயற்சி என்று ஐசெக தெரிவித்துள்ளது.

PAS-Logo-Sliderஹூடுட் சட்டத்தை ரத்து செய்யக் கோரி கெராக்கான் கட்சி சார்பில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

இந்நிலையில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் பாஸ் கட்சிக்கு ஆதரவு கிடையாது என பிகேஆர் அறிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து எதிர்க் கட்சிகளின் கூட்டணியான பக்காத்தான் ராயாட் எனப்படும் மக்கள் கூட்டணி பிளவுபடும் நிலைமை உருவாகியுள்ளது.