Home உலகம் டென்மார்க்கிற்கு, ரஷ்யா நேரடியான அணு ஆயுத மிரட்டல்! 

டென்மார்க்கிற்கு, ரஷ்யா நேரடியான அணு ஆயுத மிரட்டல்! 

480
0
SHARE
Ad

Flag_Map_of_the_Russian_Empireலண்டன், மார்ச் 23 – டென்மார்க்கிற்கு ரஷ்யா நேரடியான அணு ஆயுத மிரட்டல் விடுத்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் மேற்கத்திய நாடுகள் அனைத்து ரஷ்யாவிற்கு எதிராக திரும்பியுள்ளன.

அமெரிக்கா தலைமையில் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிற்கு எதிராக கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதால், ரஷ்யா பெரும் பொருளாதார சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது. இந்நிலையில் மேற்கத்திய நாடுகள் ஒன்றிணைந்து இருக்கும் ‘நோடோ’ (Nato) படையில் டென்மார்க் இணைய இருப்பதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக கடும் அதிர்ச்சி அடைந்துள்ள ரஷ்யா, டென்மார்க்கிற்கு தங்கள் நாட்டு தூதர் மூலம் நேரடியான அணு ஆயுத மிரட்டலை விடுத்துள்ளது. இது தொடர்பாக கோப்பன்ஹேகனில் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு டென்மார்க்கிற்கான ரஷ்ய தூதர் மிக்ஹைல் வனின் கூறுகையில்,

#TamilSchoolmychoice

“டென்மார்க், மேற்கத்திய நாடுகளின் நோடோ படையுடன் இணைவது ரஷ்யாவிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அதன் விளைவுகளை உணராமல் டென்மார்க் இணைந்தால், ரஷ்யாவுடனான நட்புறைவை பாதிக்கும். மேலும் எங்களின் அணு ஆயுதங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் டென்மார்க் படைகளை தாக்கலாம்” என்று கூறியுள்ளார்.