Home இந்தியா சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் மறைவுக்கு மோடி இரங்கல்!

சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் மறைவுக்கு மோடி இரங்கல்!

547
0
SHARE
Ad

lee kuvanபுதுடெல்லி, மார்ச் 23 – சிங்கப்பூர் நிறுவனரும், முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ மரணமடைந்தது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூர் முதல் பிரதமர் லீ குவான் யூ மரணம் அடைந்தார் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சிங்கப்பூர் தேசத்தை நிறுவிய, லீ குவான் யூ மிகவும் மோசமாக நோய்வாய்ப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

நியுமோனியாவினால் பாதிக்கப்பட்ட லீ குவான் யூ உடல்நிலை மிகவும் மோசம் அடைந்ததாக, பிரதமர் லீ ஸியென் லூங் சமீபத்திய ஊடக அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நூற்றுக்கணக்கான மக்கள் மலர்களை வைத்து நாட்டின் முதலாவது பிரதமரின் உடல்நலனுக்காக பிரார்த்தனை செய்து வந்தனர். 1990-ம் ஆண்டுவரையில் சுமார் 31 ஆண்டுகள் சிங்கப்பூரை ஆட்சி செய்த லீ குவான் யூ-வுக்கு வயது 91 ஆகும்.

லீ குவான் யூ மரணமடைந்தது தொடர்பாக இந்திய பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,

“இது மிகவும் வேதனையான சமயம். லீயின் குடும்பத்தினருக்காகவும், சிங்கப்பூர் மக்களுக்காகவுமே நமது பிரார்த்தனை இருக்க வேண்டும். லீயின் ஆன்மா சாந்தியடையட்டும்” என மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.