Home நாடு லீ குவான் இயூ மறைவிற்கு நஜிப் இரங்கல்!

லீ குவான் இயூ மறைவிற்கு நஜிப் இரங்கல்!

558
0
SHARE
Ad

Malaysian Prime Minister Najib Razak visits the Netherlandsகோலாலம்பூர், மார்ச் 23 – சிங்கப்பூரின் முன்னாள் பிரதமர் லீ குவான் இயூவின் மறைவு குறித்து மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

லீ குவான் இயூவின் மகனும், சிங்கப்பூரின் நடப்பு பிரதமருமான லீ சியான் லூங்கிற்கு, தனது வருத்தத்தை தெரிவிக்கும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ள  நஜிப், “தங்களது தந்தையின் மறைவை அறிந்து மிகவும் வருத்தமடைகின்றேன். உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “சிங்கப்பூர் மக்களுக்கு மலேசிய மக்கள் சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். லீ குவான் இயூ அவர்களின் சாதனை மிக உயர்வானது. அவரது சாதனைகள் என்றும் போற்றப்படும்” என்றும் நஜிப் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

அதேவேளையில், மலேசியாவின் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் தனது டிவிட்டர் பக்கத்தில், “தந்தையை இழந்த சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங்கிற்கு ஆழ்ந்த இரங்கல்கள். இன்றைய சிங்கப்பூர் அவரின் (லீ குவான் இயூ) மரபு. பிரம்மாண்டமான மரபு அது” என்று தெரிவித்துள்ளார்.