Home இந்தியா காஷ்மீர் தாக்குதலை நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை – மோடி!

காஷ்மீர் தாக்குதலை நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை – மோடி!

494
0
SHARE
Ad

modi vs nawazபுதுடெல்லி, மார்ச் 24 – எல்லையில் தொடரும் தீவிரவாத தாக்குதலை தடுத்து நிறுத்தினால்தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் கதுவா மற்றும் சம்பா மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார். இதுகுறித்து மோடி டுவிட்டரில் தெரிவித்ததாவது;

“பாகிஸ்தான் தேசிய தினத்தை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீபுக்கு கடிதம் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளேன். பாகிஸ்தானுடனான அனைத்து பிரச்சனைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வு காண இந்தியா விரும்புகிறது”.

#TamilSchoolmychoice

“ஆனால், அதற்கு முன்னதாக, இரு நாட்டு எல்லையில் தொடர்ந்து நடைபெறும் தீவிரவாத தாக்குதல் சம்பவங்களை பாகிஸ்தான் தடுத்து நிறுத்தி அமைதியான சூழலை உருவாக்க வேண்டும்” என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார் மோடி.

கடந்த ஆண்டு நரேந்திர மோடி பிரதமரானதும் பாகிஸ்தானுடன் மீண்டும் அமைதிப் பேச்சு வார்த்தையை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுத்தார். ஆனால், இந்த பேச்சுவார்த்தைக்கு முன்னதாக பிரிவினைவாத இயக்கங்களின் தலைவர்களுடன் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதர் ஆலோசனை நடத்தினார்.

இதையடுத்து மத்திய அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தான் குடியரசுத் தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் அப்துல் பாசித் டெல்லியில் நேற்று விருந்து அளித்தார்.

இதில் ஹுரியத் அமைப்பைச் சேர்ந்த காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்கள் சிலர் கலந்து கொண்டனர். இந்த விவகாரம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே கடந்த ஆகஸ்டில் காஷ்மீர் பிரிவினைவாதத் தலைவர்களை அப்துல் பாசித் அழைத்துப் பேசியதால் இந்திய, பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்கள் நிலையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது