Home நாடு ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படக் காட்சிகள்)

ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படக் காட்சிகள்)

615
0
SHARE
Ad

????????????????????புத்ரா ஜெயா, மார்ச் 24 – வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பொருட்கள் மற்றும் சேவை வரி (GST) அமல்படுத்தப்படும் என அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் நேற்று கிளானா ஜெயா சுங்கத்துறை அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

????????????????????

இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு சாரா இயக்கங்களைச் சேர்ந்தவர்கள், எதிர்கட்சி அரசியல் தலைவர்கள் என 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

????????????????????

இதனால், கலகத்தடுப்பு பிரிவினருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பதட்ட நிலை ஏற்பட்டது.

????????????????????

இந்நிலையில், பிஎஸ்எம் கட்சியின் சுங்கை  சிப்புட்  நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்  மைக்கல்  ஜெயகுமார், பாஸ்  கட்சியின் கோலா கிராய்  நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்  ஹட்டா ரம்லி ஆகிய இருவரும் ஷா ஆலம் காவல்துறை தலைமையகத்தில்  தடுத்து  வைக்கப்பட்டனர்.

????????????????????

ஜசெக கட்சியைச் சேர்ந்த   நான்கு  நாடாளுமன்ற  உறுப்பினர்களான லானாங்  நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸ்  லாவ்,  ஸ்தம்பின்  நாடாளுமன்ற உறுப்பினர் ஜூலியன்  டான்,  புக்கிட்  மெர்தாஜாம்  நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீபன் சிம்,  கிள்ளான்  நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ்  சந்தியாகு ஆகியோர் காவல்துறையுடன் ஏற்பட்ட  தள்ளுமுள்ளுவில்  காயமடைந்ததாகவும்  கூறப்படுகின்றது.

????????????????????

இதனிடையே, ஜிஎஸ்டிக்கு எதிராக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றாலும், அறிவிக்கப்பட்ட தேதியில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும் என்று துணை நிதியமைச்சர் டத்தோ அஹமட் மஸ்லான் தெரிவித்துள்ளார்.

 

படங்கள்: EPA