Home தொழில் நுட்பம் அண்டிரொய்டிற்கு போட்டியாக விண்டோஸ் 10 – மைக்ரோசாப்ட் புதிய திட்டம்!

அண்டிரொய்டிற்கு போட்டியாக விண்டோஸ் 10 – மைக்ரோசாப்ட் புதிய திட்டம்!

508
0
SHARE
Ad

windows_product_family_9-30-event-741x416பெய்ஜிங், மார்ச் 24 – விண்டோஸ் இயங்குதளங்கள் கணினிகளில் பெயர் பெற்றவையாக இருந்தாலும், அதிவேக வளர்ச்சி பெற்று வரும் திறன்பேசிகளின் தளங்களில் அண்டிரொய்டிற்கு போட்டியாக விண்டோஸால் மிகப் பெரிய போட்டியை ஏற்படுத்த முடியவில்லை.

மைக்ரோசாப்ட் கணிக்கும் முன்பே கூகுள் அண்டிரொய்டை களமிறக்கி திறன்பேசிகளுக்கான  தளத்தில் வேரூன்றி உள்ளது. இந்நிலையில் அண்டிரொய்டிற்கு போட்டியாக மைக்ரோசாப்ட் யோசித்த புதிய யுக்தி தான் விண்டோஸ் 10.

கணினி மட்டுமல்லாது திறன்பேசிகளுக்கும் பொருந்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள விண்டோஸ் 10 விரைவில் வெளிவர இருக்கின்றது. அதனை, விண்டோஸ் திறன்பேசிகளில் மட்டும் மேம்படுத்தாமல்,

#TamilSchoolmychoice

பிரபலமான மற்றொரு திறன்பேசியிலும் மேம்படுத்த நினைத்த மைக்ரோசாப்ட் நிறுவனம், சீனா, இந்தியாவில் அதிக விற்பனையாகி வரும் சியாவுமியை அணுகி உள்ளது.

விரைவில் வெளிவர இருக்கும் சியாவுமியின் எம்ஐ 4 திறன்பேசிகள் விண்டோஸ் 10-ல் வெளிவரலாம் என பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், இது பற்றி சியாவுமியின் துணைத் தலைவர் ஹுகோ பெர்ரா கூறுகையில்,

“சியாவுமி எப்பொழுதும் புதுமைகளை விரும்பும். ஆனால், அந்த புதுமை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பிடித்திருக்க வேண்டும். விண்டோஸ் 10-ஐ நாங்கள் வரவேற்கத் தயாராக உள்ளோம்”.

windows-10-phones-970-80“ஆனால் எங்கள் திறன்பேசிகள் தற்போது அண்டிரொய்டு தளத்தில் வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அதனை மையமாகக் கொண்டே எங்கள் திறன்பேசிகளில் பல்வேறு வசதிகளை நாங்கள் உருவாக்கி உள்ளோம்.”

“இந்நிலையில் எங்கள் தளத்தை நாங்கள் மாற்ற விரும்பவில்லை.ஆனால், இதற்கான மாற்று வழி எங்களிடம் உள்ளது. சியாவுமி பயனர்கள் தங்கள் திறன்பேசிகளில் விண்டோஸ் 10-ஐ மேம்படுத்த விரும்பினால் அவர்கள் மேம்படுத்திக் கொள்ளலாம்”.

“அது தொடர்பான அனைத்து வசதிகளையும் சியாவுமி செய்யத் தயாராக உள்ளது. இது தொடர்பாக மைக்ரோசாப்ட் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்” என்று  கூறியுள்ளார்.

விண்டோஸ் 10-ஐ திறன்பேசிகளுக்கான தளத்திற்கு எடுத்துச் செல்ல மைக்ரோசாப்ட்டிற்கு மிகச் சரியான வாய்ப்புகளை சியாவுமி ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதனை அந்நிறுவனம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுமா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.