Home உலகம் லீ குவான் யூ இறுதிச்சடங்கில் கலந்துகொள்கிறார் மோடி!

லீ குவான் யூ இறுதிச்சடங்கில் கலந்துகொள்கிறார் மோடி!

517
0
SHARE
Ad

modiபுதுடெல்லி, மார்ச் 25 – சிங்கப்பூரின் தந்தை என போற்றப்படும் லீ குவான் யூ இறுதிச்சடங்கில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்கிறார். நிமோனியா காய்ச்சலால் லீ குவான் 91 வயதில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலமானார்.

அவரது இறுதிச்சடங்கு வரும் 29-ஆம் தேதி நடைபெறுகிறது. லீ குவான் இறுதிச்சடங்கில், பிரதமர் மோடி கலந்துகொள்வார் என வெளியுறவு செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நேற்று முன்தினம் பிரதமர் மோடி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில், “சிங்கப்பூர் தந்தையும் முன்னாள் பிரதமருமான லீ குவான் யூ மரணமடைந்தது மிகவும் வேதனை அளிக்கும் தருணம்”.

#TamilSchoolmychoice

“தொலைநோக்குப் பார்வையுடன் தலைவர்கள் மத்தியில் சிங்கமாகத் திகழ்ந்தவர். லீயின் வாழ்க்கை நமக்கு நிறைய பாடங்களை அளிப்பதாக இருக்கிறது. அவரது இழப்பு வருத்தமளிக்கிறது”.

“லீயின் குடும்பத்தினருக்கும் அம்மக்களுக்கும் நமது பிரார்த்தனை எப்போதும் உடனிருக்கும். லீயின் ஆன்மா சாந்தியடையட்டும்” என்று தெரிவித்திருந்தார் மோடி.