Home கலை உலகம் விராட் கோலியை காண சிட்னி சென்றார் அனுஷ்கா ஷர்மா!

விராட் கோலியை காண சிட்னி சென்றார் அனுஷ்கா ஷர்மா!

838
0
SHARE
Ad

Anuska3சிட்னி, மார்ச் 26 – இந்திய அணியின் துணை கேப்டன் விராட் கோலியின் காதலியும் பிரபல இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா இந்தியா-ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையே நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியை காண சிட்னி சென்றார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை சந்திக்கிறது. இந்திய அணியை உற்சாகப்படுத்தும் வகையில் ஆயிரக்கணக்கான ரசிகர்- ரசிககைகள் சிட்னி நகரில் திரண்டுள்ளனர்.

பிரபல இந்திய தொழிலதிபர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள் முதல் அனுமதி சீட்டு வாங்கிய அனைத்து இந்தியர்களும் ஏற்றதாழ்வு இல்லாமல் சிட்னியில் முகாமிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

கடைசியாக பிரபல இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் இன்று சிட்னி வந்திறங்கினார். இன்று நடைபெறும் அரையிறுதி போட்டியை நேரில் கண்டு இந்திய வீரர்களை உற்சாகப்படுத்தப் போகிறார்.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இதுவரை விராட் கோலியின் ஆட்டம் எடுபடவில்லை. அனுஷ்காசர்மா இன்று மைதானத்தில் இருந்தால் விராட் கோலி அதிரடியாக விளையாடக் கூடும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.